மகரம்- வார ராசிபலன் 
மகரம் - வார பலன்கள்

மகரம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

திருமணத் தடை நீங்கும் வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. தற்போது குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும். சுய ஜாதக ரீதியாக ராகு,கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். சிலருக்கு விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது.

கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக் கூர்மை கூடும். அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். 19.6.2026 அன்று காலை 10.7க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் காரிய வெற்றியைத் தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். சனிக்கிழமை எள்ளுருண்டை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406