மகரம் - வார பலன்கள்

மகரம்- 2026 வார ராசிபலன் 11.10.2026 முதல் 17.10.2026 வரை

சிலருக்கு முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம்.

மகரம்

மன சஞ்சலம் அதிகரிக்கும் வாரம். வெகு விரைவில் ராசிக்குள் ராகு பகவானும் ஏழாம் இடத்திற்குள் கேது பகவானும் நுழைப்போகிறார்கள் முயற்சிகளிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய குறைபாடு அதிகரித்து அதிக வைத்திய செலவு செய்ய நேரும். தொழில் உத்தியோகத்தில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையால் மன சஞ்சலம் அதிகரிக்கும். திருமண முயற்சியில் காலம், பணம் என பல விரயங்கள் நடக்கும். சிலருக்கு கோட்ச்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படப் போவதால் திருமணம் போன்ற வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலருக்கு முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சினையாக உருவாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் பெண் தெய்வங்களுக்கு சர்க்கரைப் பொங்கல் படையலிட முன்னேற்றம் உண்டாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT