மகரம் - வார பலன்கள்

மகரம்- 2026 வார ராசிபலன் 26.7.2026 முதல் 1.8.2026 வரை

பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும்.

மகரம்

புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் சம சப்தம பார்வை உள்ளது. அக்டோபர் மாத இறுதியில் குரு அதிசாரமாக சிம்ம ராசிக்குள் செல்வார். அதுவரை முக்கிய பணிகளை திட்டம் தீட்டி செயல்படுத்தலாம். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து இஷ்ட, குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமை காவல் தெய்வங்களுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406