கடகம் - வார பலன்கள்

கடகம்- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

வங்கிகள், நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும்.

கடகம்

மனதில் தன்னம்பிக்கை கூடும் வாரம். ராசியில் சூரியன் குரு சேர்க்கை உள்ளது. இது சிவராஜ யோக அமைப்பாகும். இந்த கிரகச் சேர்க்கை மீண்டும் ராசியில் உருவாக 12 ஆண்டுகள் ஆகும்.உடலும், மனமும் பொலிவு பெறும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவரவரின் வயதிற்கும், தேவைக்கும் ஏற்ற மாற்றம் உண்டாகும். கையிருப்பு கணிசமாக உயரும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிப்பால் கெளரவம் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்க வேண்டும் என்று ஆசை உண்டாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாகபஞ்சமி அன்று விரதம் இருந்து புனித நீர்களால் சர்ப்ப சிலைகளுக்கு அபிஷேகம் செய்யவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406