கடகம்- வார ராசிபலன் 
கடகம் - வார பலன்கள்

கடகம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.

கடகம்

புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் வாரம். ராசியில் உள்ள குருவிற்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. இது குருமங்கள யோகமாகும். லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் அனைத்து விதமான ஜாதக குறைபாடுகளும் அகலும் கிரக நிலைகள் கடக ராசிக்கு சாதகமாக உள்ளதால் தொட்டது துலங்கும்.

பல சவாலான சூழ்நிலைகளையும் லகுவாக எதிர்கொள்வீர்கள். இதுவரை பட்ட சங்கடங்கள் விலகும். கடன் சுமை குறையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். அன்றாடப் பணியில் சிறப்புடன் செயல்பட முடியும்.

வியாபாரத்தில் நிலவிய தேக்க நிலைமாறி நல்ல லாபம் கிட்டும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும்.எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். 9.6.2026 அன்று அதிகாலை 3.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிரதோஷ நாளன்று நந்திக்கு பால் அபிஷேகம் செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406