குடும்பத்தில் குதூகலம் உண்டாகும் வாரம். ராசியில் சூரியன் புதன் குரு சேர்க்கை உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாகும். கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிக வெளியூர் பயணம் செல்ல நேரும். பணிபுரியும் இடத்தில் உள்ள விதிகளை மீறாமல் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். தீராத பிணிகளும் தீரும். யோகா, மூச்சுப் பயிற்சி, மெடிடேசன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த வாரம் ஏற்படுத்தும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் மன வேதனையில் இருந்தவர்கள் நம்பிக்கை, நாணயத்தை நிலை நிறுத்துவார்கள். ஆடி வெள்ளிக்கிழமை புனித நீர்களால் அபிஷேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.