கடகம் வார ராசிபலன் 
கடகம் - வார பலன்கள்

கடகம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

மருமகனால் ஏற்பட்ட மனக்கவலை அகலும்.

கடகம்

புதிய அனுபவம் உண்டாகும் வாரம். தனம் வாக்குக் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனினும் ராசியில் குரு புதன் சுக்கிரன் என சுப கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் பெரிய பாதகம் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் சுப விரயங்கள் நடக்கும் தெய்வ சிந்தனை, நம்பிக்கை, பலம், தைரியம் அதிகரிக்கும்.நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். உங்கள் தாய் மாமா அல்லது தாத்தா உங்களுக்கு உதவலாம். மிக்க மகிழ்ச்சியான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வருவார்கள். எதிரிகள் தொல்லை நீங்கும். இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். உங்களை வாட்டிய கடன் பிரச்சினையிலிருந்து மீளக்கூடிய மார்க்கம் தெரியும். வயது முதிர்ந்தவர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். மருமகனால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். திருமணப் பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.3.7.2026 அன்று நள்ளிரவு 12.48க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பௌர்ணமி அன்று விரதம் இருந்து அம்மன் வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406