கடகம் - வார பலன்கள்

கடகம்- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகம் ஏற்படும்.

கடகம்

புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் புதன் கேது சேர்க்கை உள்ளது. அன்பாக பேசி சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது. கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கல்வி நிறுவனங்கள், தர்மஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்து பாக்கிய பலனை அதிகரிக்க முயல்வீர்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். வழக்குகள் வெற்றியடையும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகம் ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். 27.8.2026 அன்று பகல் 1.35 முதல் 29.8.2026 இரவு 9.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய முதலீடு போன்ற புதிய முயற்சிகளை தவிர்த்து அன்றாட பணியில் மட்டும் ஈடுபடவும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட ஜென்ம குருவால் நன்மைகள் அதிகரிக்கும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406