கடகம் - வார பலன்கள்

கடகம்- 2026 வார ராசிபலன் 19.7.2026 முதல் 25.7.2026 வரை

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கடகம்

முத்தாய்பான முன்னேற்றங்கள் உண்டாகும் சாதகமான வாரம். ராசியில் சூரியன் குரு சேர்க்கை உள்ளது. இது சிவராஜ யோகமாகும். தொட்டது துலங்கும். உங்களது திட்டங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. பங்கு சந்தையில் ஆர்வம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனால் பாதித்த கவுரவம், மரியாதை குறைவு மறையும். வருமானம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. வங்கி இருப்புகள் அதிகரிக்கும். சேமிப்புகள் உயரும். இலக்கை நிர்ணயித்து செயல்படுவது நல்லது. தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். தொழில் போட்டிகளை சமாளிக்கும் மன வலிமை அதிகரிக்கும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிர பலமடைவார்கள். ஆடி மாதம் புனித நீர்நிலைகளில் நீராடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406