கடகம் - வார பலன்கள்

கடகம்- 2026 வார ராசிபலன் 18.10.2026 முதல் 24.10.2026

பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும்.

கடகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் நீச்சகதியில் சஞ்சரிக்கிறார். சொத்து தொடர்பான பணிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஆன்மீகத் தலைவர் அல்லது மூத்த அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். சித்தப்பாவுடன் சிறு மோதல் மன அழுத்தம் மற்றும் டென்சன் ஏற்படலாம். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் முன்னர் வேலை பார்த்து விலகிய வேலைக்கே மீண்டும் செல்வார்கள். பிள்ளைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். பெண்களுக்கு குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் அனுமதி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் செயல் திறமை அதிகரிக்கும். 21.10.2026 அன்று காலை 7 மணி முதல் 23.10.2026 அன்று பகல் 3.04 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்வலி, அலுப்பு போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். பருவ வயதினர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிரி தொல்லைகள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். திங்கட்கிழமை அம்மனுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT