சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, செவ்வாய், கேது சேர்க்கை உள்ளது. கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. காதல் கலப்பு திருமணம் அதிகமாக இருக்கும். எதிர்பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய தொழிலில் பார்ட்னர்கள் வரலாம். பழைய பார்ட்னர்கள் வெளியேறலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தம்பதிகள் கருத்து வேறுபாட்டை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டால் குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த பதவியும், பொறுப்பும் வந்து சேரும். 17.11.2026 அன்று பகல் 3.30 மணி முதல் 19.11.2026 அன்று நள்ளிரவு 12.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபமான உங்களது பேச்சால் குடும்பத்தில் சலசலப்பு அதிகமாகும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளையாரை வணங்குவதால் சகல விதமான நன்மைகளும் கூடும்.