கடகம் - வார பலன்கள்

கடகம்- 2026 வார ராசிபலன் 11.10.2026 முதல் 17.10.2026 வரை

எல்லாரிடமும் சகஜமாக மனம் ஒன்றி பழக முடியாது.

கடகம்

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானம் செல்கிறார். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ராசியை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சிலர் குறுக்குவழி வருமானத்திற்காக உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். நிம்மதியான தூக்கம் இருக்காது. கோப உணர்வு மிகுதியாகும். எல்லாரிடமும் சகஜமாக மனம் ஒன்றி பழக முடியாது. இதனால் சிலருக்கு திருமணத் தடை வரலாம். விரக்தி அதிகமாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுத்தாலோ அல்லது பண உதவி செய்தாலோ திரும்ப கிடைக்காது. கோட்சார கிரகங்கள் முன்னுக்கு பின் முரணான பலன்களை வழங்கும் வாய்ப்பு உள்ளதால் இறை நம்பிக்கை மிக அவசியம். நவராத்திரி காலங்களில் தயிர் சாதம் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT