கடகம் - வார பலன்கள்

கடகம்- 2026 வார ராசிபலன் 26.7.2026 முதல் 1.8.2026 வரை

யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கடகம்

மறைமுக வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசியில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். இதுவரை தடைபட்ட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. தொழிலுக்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். உங்களின் வாழ்வாதாரம் உயரும். சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு பணி நிரந்தரமாகும். அரசு பணிக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வீண் அலைச்சலால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. 31.7.2026 அன்று காலை 6.38 மணி முதல் 2.8.2026 பகல் 3.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிந்திக்கும் திறன் குறையும். மன சஞ்சலத்தை அதிகப்படுத்தும் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406