புத்திக்கூர்மை பளிச்சிடும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். திருமணமான இளம்பெண்களுக்கு கரு உருவாகும். பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும். பூர்வீகச் சொத்தை விற்பனை செய்து, புதிய மனை வீடு வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பால்ய வயது நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.
பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். விருப்பப்படி இட மாறுதல் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் கூடி வரும். 1.6.2026 அன்று இரவு 7.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் கூடும். தினமும் வேல் வழிபாடு செய்வதால் சங்கடங்கள் விலகும்.