மேஷம் வார ராசிபலன் 
மேஷம் - வார பலன்கள்

மேஷம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

தொழில், உத்தியோகம் என மாறி மாறி காலத்தை கடத்தியவர்களுக்கு நிலையான வேலை கிடைக்கும்.

மேஷம்

சிறப்பான வாரம். பூர்வ புண்ணிய அதிபதி சூரியன் சகாய ஸ்தானம் செல்வதால் செயல்களில் கீர்த்தி, புகழ், பெருமை வெற்றி மிளிரும். சகோதர சகாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் மீதான பிரச்சனைகள் முற்றுப்புள்ளியாகி சொத்துக்கள் உங்கள் பெயருக்கு மாற்றலாகும். எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்புள்ளது. ஆழ்மனதில் புதிய உணர்வுப் பூர்வமான எண்ணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு தகுதிக்கு மீறிய பதவி கிடைக்கும். தொழில், உத்தியோகம் என மாறி மாறி காலத்தை கடத்தியவர்களுக்கு நிலையான வேலை கிடைக்கும். தங்கு தடையில்லாத பணவரவு ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டே இருக்கும்.நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். 29.6.2026 அன்று நள்ளிரவு 1.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். உணவு கட்டுப்பாடு தேவை. மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க பௌர்ணமி அன்று முருகன் வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT