மேஷம் - வார பலன்கள்

மேஷம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகபோகங்களும் அதிகரிக்கும்.

மேஷம்

வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.இந்த வாரத்தில் உலாவரும் கிரக நிலைகள் உங்களுக்கு நல்ல சுப யோகங்களை பெற்றுத் தரப்போகிறது. பேச்சை மூலதனமாகக் கொண்டவர்கள், வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆடிட்டிங் துறையினர் மேன்மையான பலன்கள் பெறுவார்கள்.

வருமானம்

தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும், வேலை செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சுகபோகங்களும் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் உண்டாகும்.

ஏழரைச் சனி

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். மருத்துவச் செலவு குறையும். ஏழரைச் சனியையும் மீறிய சுப பலன்கள் உண்டாகும். 30.5.2026 அன்று காலை 6.39 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் ஆகிறது. இலக்கை நிர்ணயித்து செயல் படுவது நல்லது. வைகாசி விசாகத்தன்று குல இஷ்ட தெய்வ வழிபாட்டால் விரும்பியதை அடைய முடியும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT