மேஷம் - வார பலன்கள்

மேஷம்- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

சேமிக்கும் வகையில் வருமானம் உயரும்.

மேஷம்

திட்டமிடுதலில் வெற்றி உண்டாகும் வாரம். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை சுக்கிரனின் மேல் பதிகிறது. இதனால் முன்னேற்றமான வாழ்க்கை உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் வெற்றி நடைபோடுவீர்கள். பணவரவு உயரும். அரசிடமிருந்து இலவச வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்கத்திட்டமிடுவீர். கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சேமிக்கும் வகையில் வருமானம் உயரும். வெகு சிலருக்கு விபரீத ராஜயோகமாக உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. தாய், தந்தை, குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவைகளை, விருப்பங்களை நிறைவு செய்து உங்கள் கடமையை பூர்த்தி செய்வீர்கள். எதிர் பாலினத்தவரிடம் விலகி இருப்பது நல்லது. வாங்கிய சொத்திற்கு இந்த வாரத்தில் பத்திரப் பதிவு நடந்து விடும். திருமணத்தடை அகலும். விரும்பிய வரம் அமையும். செவ்வாய்க்கிழமை வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406