மேஷம் வார ராசிபலன் 
மேஷம் - வார பலன்கள்

மேஷம்- வார ராசிபலன் 21.6.2026 முதல் 27.6.2026 வரை

குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும்.

மேஷம்

நெருக்கடிகள் விலகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிந்தனைகள் பெருகும். முயற்சி ஸ்தானம் பலம் பெறுவதால் இதுவரை சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். சொத்துகள் சேரும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும்.தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். 26.6.2026 பகல் 12.33 முதல் 29.6.2026 நள்ளிரவு 1.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செவ்வாய் கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவிகள் செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406