மேஷம் - வார பலன்கள்

மேஷம்- 2026 வார ராசிபலன் 18.10.2026 முதல் 24.10.2026

பணவரவில் நிலவிய தடைகள் விலகி வருமானம் இரட்டிப்பாகும்.

மேஷம்

முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் வாரம். பாக்கியாதிபதி குரு உச்சம் பலம் பெறுவது சிறப்பு. இதுவரை உங்களின் மனதில் இருந்த நிறைவேறாத பெரிய ஆசைகள், திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் ஞானம் அதிகரிக்கும். தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் நம்பிக்கை கூடும். பணவரவில் நிலவிய தடைகள் விலகி வருமானம் இரட்டிப்பாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும்.புத ஆதித்ய யோகத்தால் நல்ல தலைமைப் பண்பும் அறிவுத்திறனும் பெருகும். பூர்வீகச் சொத்தில் நிலவிய மனக் கசப்பு மறையும். குலதெய்வ அருளால் புத்திர பிராப்த்தம் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியத்தில் நிலவிய தடைகள் அகலும். புதிய காதல் உருவாகும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். குல தெய்வ அனுகிரகமும் முன்னோர்களின் நல்லாசியும் பரிபூரணமாக கிடைக்கும். கைபேசியை கவனமாக கையாளவும். கணவன், மனைவியிடம் இயல்பு நிலை நீடிக்கும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். பெண்களுக்கு சரளமான பண புழக்கம் இருக்கும். தயிர் சாதம் தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT