ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை உள்ளது. ஆன்மீக பயணம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். இதனால் நல்ல மனநிலை நீடிக்கும். தொட்டது துலங்கும். மனம் பரவச நிலையில் இருப்பதல் நினைத்தது நடக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாகும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் உண்டு. ராகு கேது பெயர்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் நடக்க இருப்பதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சில சங்கடங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீர்கள். தொழில் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் அதிர்ஷ்டம் யோகம் தேடி வரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இளம் பருவத்தினருக்கு திருமண வாய்ப்பு கைகூடி வரும். உயர் கல்வியில் நிலவிய தடைகள் விலகும். தீபாவளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் செலவழிக்க திட்டமிடுவீர்கள். அரசாங்க கடைநிலை ஊழியர்களுக்கு தீபாவளி உணவு உடை தானம் வழங்கவும்.