மேஷம் 
மேஷம் - வார பலன்கள்

மேஷம்- 2026 வார ராசிபலன் 22.11.2026 முதல் 28.11.2026 வரை

திருமண முயற்சியில் ஏற்ற இறக்கமான பலன் உண்டு.

மேஷம்

பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் கேதுவுடன் மிக நெருக்கமாக பயணிக்கிறார். உணவு சுகபோகம் ஆகியவற்றில் நாட்டம் குறையும். சிலர் பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். அல்லது அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது உத்தமம். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். திருமண முயற்சியில் ஏற்ற இறக்கமான பலன் உண்டு. பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்கள் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளை அரவணைத்து செல்லவும். காழ்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்பு உங்களை புரிந்து கொள்வார். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும். பங்குச் சந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் சுய ஜாதக சாதக பாதகம் அறிந்து ஈடுபடவும். கற்பனை, கனவுகள் நினைவாகும். அரசியல் பிரமுகர்கள் பதவியை தக்க வைக்க மேல் இடத்தின் ஆதரவு அவசியம். பௌர்ணமி அன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT