மேஷம் - வார பலன்கள்

மேஷம்- 2026 வார ராசிபலன் 11.10.2026 முதல் 17.10.2026 வரை

வருமானத்தை அதிகரிக்க புதிய பாதை தென்படும்.

மேஷம்

தைரியம் பிறக்கும் வாரம். தைரிய ஸ்தான அதிபதி புதன் ராசியை பார்ப்பதால் மனதில் உற்சாகம் தைரியம் பிறக்கும். புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லெளகீக ஆசைக்கு மனம் ஏங்கும். உங்களை சர்வ சாதாரணமாக நினைத்தவர்கள் வியக்கும் படி தடைகளைத் தாண்டி வெற்றி நடை போடுவீர்கள். பாராமுகமாக இருந்த உறவுகள் மீண்டும் இணைந்து அன்பு பொழிவார்கள். தொழில், உத்தியோகத்தில் நிலவிய சிக்கல்கள் தீரும். வருமானத்தை அதிகரிக்க புதிய பாதை தென்படும். வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். எதிரிகள் விலகுவார்கள். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மருத்துவ செலவு குறையும். 13.10.2026 அன்று இரவு 7.12 மணி முதல் 16.10.2026 அன்று காலை 6.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நவராத்திரி காலங்களில் சிவப்பு நிற மலர்கள் சாற்றி அம்பிகையை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT