கடமை உணர்வு நிறைந்த மேஷ ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் சுக ஸ்தானத்திற்குள் கேது பகவானும் தொழில் ஸ்தானத்திற்குள் ராகுபகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
இதுவரை ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் நின்ற ராகு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார்கள். தொழில் வளர்ச்சியில் பெரும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நுகர்ந்த பண வாசனையையின் இன்பத்தை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலை மிகுதிப்படுத்துவார். ராகு ஸ்பீடான எதையும் சட்டத்திற்கு புறம்பாக நடத்தும் கிரகம். உங்களை எதிர்த்து யாரும் நிற்க முடியாத வகையில் பல்வேறு தொழில் தந்திரங்களை ராகு பகவான் கற்றுக் கொடுக்கப் போகிறார். ஜனன கால ஜாதகத்தில் 2,5, 10 மற்றும் 11ம் அதிபதிகளின் தசை நடப்பவர்களுக்கு வளர்ச்சியின் அளவை அளவிட முடியாது. செவ்வாயும் ராகுவும் கடும் பகை கிரகம் என்பதால் இதுவரை நியாயம் தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்களை கூட தொழில் தர்மத்தை கடைபிடிக்க விடமாட்டார். ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகு தசை நடப்பவர்களுக்கு சொன்னதே வேதம் படித்ததே பாடம் என்று சொல்லும் வகையில் பிடிவாதம் மற்றும் முரட்டு குணம் அதிகரிக்கும்.
மேஷ ராசியின் அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் மன நிறைவான சுகபோக வாழ்வில் ஆசை ஏற்படும். அதற்காக கடுமையாக போராட நேரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியத்தையும் தருவார். ஜாதகரின் பல்வேறு வாய்ப்புகளுக்கு உறுதுணையாக இருந்தால் கூட உங்கள் பெயருக்கு ஒரு கலங்கத்தையும் ஏற்படுத்த தயங்க மாட்டார். சில குழந்தைகள் தந்தையை பிரிந்து தாத்தா வீட்டிற்கு செல்ல நேரும் அல்லது தந்தை குறுகிய காலத்திற்கு தொழில் நிமித்தம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக தந்தை குழந்தையை பிரிந்து வாழ நேரும். ஒருவருக்கு ஆத்ம ஞானம் கிடைக்க விடாமல் தடை செய்வதில் ராகுவிற்கு இணையாக எந்த கிரகமும் செயல்படவே முடியாது.
மேஷ ராசிக்கு சுகஸ்தான அதிபதியாக சந்திரனின் திருவோண நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல் மற்றும் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்குவீர்கள். குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். தாய், தந்தையுடன் கருத்து வேறுபாடு தோன்றும். இரண்டு, நான்கு சக்ர வாகனங்கள் வாங்கி மகிழ்வார்கள். மின்சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்கதையாகவே மன உளைச்சலை தந்து கொண்டே இருக்கும். சாந்தம், அமைதி, பொறுமை என்றால் என்ன? என்று கேட்கும் வகையில் கோப உணர்வு மிகுதியாக இருக்கும்.
மேஷ ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம். யார் செய்த பாவத்திற்கோ நான் தண்டனைய அனுபவிக்கிறேன் என்று ஆழ் மனவேதனையை வெளிப்படுத்தும் நேரம். பூர்வீகம், பூர்வ புண்ணியம் மற்றும் குலதெய்வம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும் தடை, தாமதத்தையே தருவார்கள். பாட்டன் செய்த கர்ம வினை பாதிப்புகள் அதிகம் இருக்கும். குழந்தை பாக்கியத்தில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு சொந்த ஊர் ஞாபகம் வாட்டி எடுக்கும். பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் சட்டம் தொடர்பான பிரச்சனைகளும் நீதிமன்ற அலைக்கழிப்பும் தொடர்கதையாக இருக்கும்.
நான்காமிடம் என்பது சுகஸ்தானம் நிதானமற்ற வேகத்துடன் செல்பவர்கள் விவேகத்துடன் செல்பட வேண்டும் என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள் புரிந்து கொள்வீர்கள். விதிக்கு மீறிய சுக போக வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது என்று உணர்வீர்கள். நியாயம் மற்றும் தர்மமே எத்தனை பிறவி எடுத்தாலும் வரப்போகும் சொத்து என்பதை அறிவீர்கள். சொத்து வாங்குதல், விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. ஒரு சிலர் தாங்கள் சம்பாதித்த அனைத்தையும் நிதானமில்லாமல் ஒரே சொத்தில் முடக்கி விட்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கேது திணற வைப்பார். கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு, தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம், விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயம் வரலாம். சொத்தை விற்கவும் முடியாமல் பயன்படுத்தவும் முடியாமல் பல தலைமுறைக்கு சொத்தை வைத்து வேடிக்கை பார்க்க வேண்டிய நிலையை உருவாக்குவார். சொத்தில் அதிகமாக முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக சுய ஜாதகத்தை சரிபார்க்க வேண்டும்.
மேஷ ராசிக்கு 3,6ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உடன் பிறந்தவர்களுடன் இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு குறையும். ஜாதகரின் திறமையை சகோதரர் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாம். சிறு தூர பயணம் சார்ந்த தொழிலாக இருக்கும்.அடிக்கடி தொழில் நிறுவனத்தை மாற்றுவார்கள். எழுத்து, கமிஷன்,ஒப்பந்த அடிப்படையிலான தொழில் காலிமனை விற்பனை செய்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். சிலர் புதிய கிளை நிறுவனங்கள் துவங்குவார்கள். தொழிலில் அலைச்சல், அவசரம், நிலையற்ற தன்மை இருக்கும். தன் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத தொழில் அல்லது பரிட்சயம் இல்லாத தொழில் செய்து விரயத்தையும், சிரமங்களையும் சந்திப்பார். கிரெடிட் கார்டு டெபிட் கார்டு போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவார்கள்.
மேஷ ராசிக்கு 10,11ம் அதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம்.பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு இது பொற்காலம்.எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் ஈடேறும். வக்கீல்கள், ஜோதிடர்கள், விற்பனை பிரதிநிதிகள், தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நன்றாக சம்பாதிக்க முடியும். முறையான ஆதாரங்கள் இல்லாத பூர்வீக சொத்துகள் இருந்தால் அதற்குரிய ஆவணங்கள் கிடைக்கும். கை மறதியாக வைத்த தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும். இதுவரை மூத்த சகோதர வழியில் இருந்த இணக்கமற்ற சூழல் மறையும். சிலருக்கு கதை, கவிதை எழுதும் ஆர்வம் ஏற்படும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். அலுவலகமே வியக்கும் வகையில் உங்கள் திறமைகள் வெளிப்படும். ஊதிய உயர்வு கிடைக்கும்.
மேஷ ராசிக்கு 9,12ம் அதிபதியான குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் இந்த காலகட்டத்தில் பலருக்கு கண் மட்டும் மூடி இருக்கும். விடிய விடிய தூங்காமல் விடிந்த பிறகு தூங்குவார்கள்.உரிய வயதில் திருமணம் நடக்காது. நேரத்திற்கு சாப்பிட உணவு கிடைக்காது. கிடைத்தாலும் சாப்பிட முடியாது. நல்ல வருமானம் கிடைக்காது. கிடைத்தாலும் சேமிக்க முடியாது. முன்னோர்களின் குணத்தை பிரதிபலிக்கும் வகையில் சில வாரிசுகளிடையே பிடிவாத குணம் இருக்கும். பங்காளி சண்டை பேச்சுவார்த்தை மூலமாக சரியாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பும் கிடைக்கும்.பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும்.
தினமும் பறவைகளுக்கு நீர் மற்றும் தானியம் உண்ணத் தர வேண்டும். சனிக்கிழமை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரையிலான எமகண்ட நேரத்தில் மௌன விரதம் இருந்து ராம நாமப் பாராயணம் செய்யும் போதும் காலத்தால் தீர்க்க முடியாத பல குற்றங்களுக்கு தீர்வு கிடைக்கும்.