பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் உச்சம்பெற்ற குருவோடு சேருவதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. ஐப்பசி 3-ந் தேதி சிம்ம ராசிக்கு வரும் குரு, உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தடைகள் தானாக விலகும். தனவரவு திருப்தி தரும். மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன், புதன் கிரகங்கள் இணைந்து கூட்டுக்கிரசு போகத்தை ஏற்படுத்துகிறது.
மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான் ஐப்பசி 3-ந் தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ரக் கதியில் செல்லப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 9. 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். இதன் விளைவாக சில நல்ல காரியகள் உங்களுக்கு நடக்கலாம். ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் நன்னமகள் பலவும் நடைபெறும், குறிப்பாக ஆரோக்கியத் தொல்லை அகலும், உற்சாகத்தோடு பணிபுறிவீர்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
குருவின் பார்வை 9. 11 ஆகிய இடங்களில் பதிவதால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பூர்விக சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்படுவீர்கள். குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். இளைய சகோதரத்து உன் இருந்த கருத்து வேறுபாடு அகலும். கவுரவம், அந்தஸ்து உயரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்ச்சி கூடும்.
உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு. ஐப்பசி 27-ந் தேதி (13.11.2026) அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வேகமும், விவேகமும் கலந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தொடர்ந்து வந்து அலைமோதும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கான சலுகையை வழங்க முன்வருவர். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை.
ஸ்தானம் எனப்படும் 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். சொத்துக்கள் வாங்கும் போகம் உண்டு வீடு வாங்குவது. இடம் வாங்குவது. கட்டிய வீட்டைப் பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது. கேது 'ஞானகாரகள்' என்று அழைக்கப்படுவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் உருவாகும். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை வாகள யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவுசெய்து நடத்தும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்க ளுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு கவுரவமும், அந்தஸ்தும் கூடும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். ஆடை- ஆபரணச் சேர்க்கை உண்டு.