பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்திதரும். அதே நேரம் சகாய ஸ்தானத்தில் அதற்கு அதிபதியான புதன் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி உண்டு. புனிதப்பயணங்கள் அதிகரிக்கும். இடம் வாங்குவது. வீடு கட்டுவது. கட்டிய வீட்டை விரிவு செய்வது போன்றவற்றில் சுவனம் செலுத்தும் நேரம் இது 'அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருக்கிறதே' என்று கவலைப்பட வேண்டாம். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் அவரது பார்வை பலனால் நற்பலன்கள் கிடைக்கும்.
ஆடி 15-ந் தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைந்திருப்பதால் சந்தர்ப்பங்கள் அனைத்தும் சாதகமாக அமையும், சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு புதன் அதிபதியாவதால் உடன்பிறப்புகளின் வழியில் நன்மை கிடைக்கும். அரசல் புரசல்களாக இருந்த அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாகச் செயல்படுவர். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதோடு சம்பள உயர்வும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களிடம் இணக்கமாக நடந்துகொள்வர்.
மிதுன - செவ்வாய்
ஆடி 16-ந் தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளின் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். ஊர் மாற்றம். இடமாற்றம் உறுதியாகலாம். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பலநாட்களாக பேசிப் பேசி தள்ளிப்போன வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். கூட்டுத் தொழிலில் இருந்து விலகித் தனித்தொழில் தொடங்க முற்படுவீர்கள். பூமிகாரகள் செவ்வாய் என்பதால் பூமி சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பத்திரப் பதிவில் இருந்த நடை அகலும், தைரியமும், நன்னம்பிக்கையும் கொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும்.
ஆடி 17-த தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 2, 7.ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது நல்ல தல்ல. பணப்புழக்கத்தில் தடை ஏற்படலாம். வரவேண்டிய தொகை தாமதப்படும். குடும்பத்தில் பழைய பிரச்சினை தலைதூக்கும் வாசல் தேடிவந்த வரன்கள் மீண்டும் திரும்பிச் செல்லலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் தாமதம் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபமும், விரயமும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு, வீடு மாற்றம் ஏற்படலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 27, 28, ஆகஸ்டு: 1, 2, 7, 8, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.