கும்பம் - வார பலன்கள்

கும்பம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள்.

மாலை மலர்

கும்பம்

சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். குலத்தொழில், கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இட மாற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும்.

பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதர உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மையை மேலும் அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சிினை நீங்கும். பஞ்சமுக நெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406