கும்பம் - வார பலன்கள்

கும்பம் - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்.

விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம்.தற்போது ராசியில் உள்ள ராகுவிற்கு குரு பார்வை இல்லை என்பதை மறக்கக்கூடாது. அன்றாட முக்கிய பணிகளில் கூட விழிப்புடன் இருக்க வேண்டும். சில பல முயற்சிகளில் போராடி வெற்றி உண்டாகும்.ராசியை ராகு கடக்கும் வரை வாழ்க்கையை பாதிக்கும் பெரிய முடிவுகளை எடுக்கக் கூடாது. ஆடை ஆபரணம், சொத்து சேர்க்கை, ஏற்படும். புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.

சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு கண்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். கணவன், மனைவி உறவு சுமூகமாக இருக்கும். உற்றார், உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்படலாம். சனிக்கிழமைகளில் சலவைத் தொழிலாளிகளின் தேவை அறிந்து உதவி செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

SCROLL FOR NEXT