கும்பம் வார ராசிபலன் 
கும்பம் - வார பலன்கள்

கும்பம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

பெண்களுக்கு தாய் மற்றும் சகோதர வழி அன்பு ஆறுதலாக இருக்கும்.

கும்பம்

பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நல்ல மாற்றங்கள் வந்து சேரும். திடீர் அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள், மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் சித்திக்கும். பெண்களுக்கு தாய் மற்றும் சகோதர வழி அன்பு ஆறுதலாக இருக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். நோய் தொல்லை கட்டுக்குள் இருக்கும். பொய்யான கெட்ட வதந்ததிகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் கொடுத்த வாக்கை காப்பாற்றி வம்பு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். பௌர்ணமி அன்று விரதம் இருந்து குலதெய்வத்தை வழிபட ஜென்ம ராகுவால் ஏற்படும் தாக்கம் குறையும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406