சகாயமான வாரம். முயற்சி ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார்.புதிய முயற்சிகள், சிந்தனைகள் வெற்றி தரும்.பணம் பல வழிகளில் வந்து சேரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும்.
வீடு, நிலம், வாகனம் வாங்குதல், கால்நடை வாங்குதல் ஆகியவை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையத் துவங்கும். அரசுத் துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன், தொழில் கடன் கிடைக்கும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.
25.5.2026 அன்று காலை 9.2 முதல் 27.5.2026 அன்று இரவு 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் சிறு பயம், அச்சம், சந்தேகம் ஏற்படும். வீண் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். காது,மூக்கு, தொண்டை போன்ற உடல் உபாதைகள் சிரமம் தரும். வேண்டாத பிரச்சினைகளை யோசித்து மனக் குழப்பத்தை அதிகரிக்க கூடாது. வைகாசி விசாகத் தன்று இயன்ற தான தர்மங்கள் வழங்கவும்.