கும்பம் - வார பலன்கள்

கும்பம்- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்டதிட்டங்களை கடைபிடிப்பது நல்லது.

கும்பம்

தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டிய வாரம். ராசியில் ராகுவும் ஏழாம் இடத்தில் சூரியன் புதன் கேது சேர்க்கை உள்ளது. ராகு கேதுக்கள் எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பிப்பார்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். தொழிலில் புதிய அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டிய நேரம். தொழிலில் நிரந்தர தன்மையை தக்க வைக்க கடுமையாக உழைக்க வேண்டும். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்டதிட்டங்களை கடைபிடிப்பது நல்லது. சுப நிகழ்விற்கான முயற்சியில் சிறு, தடை, தாமதம் உண்டாகும். வேலை இன்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். சிலருக்கு மறுமணம் செய்யும் அமைப்பு ஏற்படலாம். புதிய நண்பர்களிடம் அதிகமாக பழகுவதை தவிர்க்கவும்.வரவிற்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். சிலர் விலை உயர்ந்த பொருட்களை ஆன்லைனில் வாங்கி ஏமாறலாம்.துணிந்து சில முடிவுகளை எடுத்து வெற்றியை உறுதி செய்வீர்கள்.யாரையும் பகைக்க வேண்டாம்.சனிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT