கும்பம் 
கும்பம் - வார பலன்கள்

கும்பம்- 2026 வார ராசிபலன் 15.11.2026 முதல் 21.11.2026 வரை

வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும்.

கும்பம்

வாழ்வியல் மாற்றம் நடக்கும் வாரம். இதுவரை ராசியிலிருந்து துக்கத்தையும் துயரத்தையும் வழங்கிய ராகு பகவான் ராசியை விட்டு விலகப் போகிறார்.பெரும் வாழ்வியல் மாற்றம் நடக்கும். எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் நடந்த குழப்பங்களும் துயரங்களும் விலகும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்க ளின் நிலவிய குழப்பங்கள் சாதகமாகும். அபார வளர்ச்சி சாத்தியமாகும். உங்களின் அனைத்து தேவைகளையும் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்யப் போகிறீர்கள். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். அதிர்ஷ்டம், உயில் சொத்து காப்பீட்டு முதிர் தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட வளமான பலன்களைப் பெற முடியும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT