பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். குடும்பச் சுமை அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. உடல்நலத்திலும் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும் ஏழரைச் சனியில், உங்களுக்கு குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாணக்கனவை நனவாக்க எடுத்த முயற்சி பலன்தரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்றிருப்பதால் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபடுவது நல்லது.
எடுத்த முயற்சி ஆடி 15-ந் தேதி (31.7.2006) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைந்து சஞ்சரிப்பதால் நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு, புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்து உங்களுக்குரிய பங்கு கைக்கு வந்துகேரும். கட்டிடம் கட்டுவது. கட்டிடம் வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
ஆடி 16-ந் தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3. 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் போது உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சுமை படிப்படியாகக் குறையும். எதிர்காலம் பற்றிய மன பயம் அகலும், வியாபாரப் போட்டிகள் விலகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் திருமணங்களை முன்னின்று நடத்திவைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். கடமையைச் செவ்வனே செய்து வெற்றி காணும் நேரம் இது. கடல்தாண்டி சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு அது கைகூடும்.
ஆடி 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4. 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரள் நீச்சம் பெறுவது நல்ல தல்ல. தாய்வழி ஆதரவும், பெற்றோர் வழி ஆதரவும் குறையும். குடும்பப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதிலும் நிலையான ஈடுபாடு இருக்காது. உறவினர்களையும், உடன்பிறப்புகளையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். ஆரோக்கியத்தில் கவளம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவு வந்துசேரும். உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்
ஜூலை: 22, 23, 27, 28, ஆகஸ்டு: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.