கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

குடியிருக்கும் வீடு, தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும்.

பண்பான கும்ப ராசியினரே.. இதுவரை ராசிக்கு ஆறாமிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக ஏழாமிடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் கும்ப ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.

அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள்

இதுவரை ராசிக்கு ஆறாமிடத்தில் நின்ற குருபகவான் அதிசாரத்தில் ஏழாமிடமான கும்பத்திற்கு செல்கிறார். கும்ப ராசிக்கு தன லாப அதிபதியான குரு பகவான் ஏழாம் இடத்திற்கு செல்வது நன்மையை தரும் அமைப்பாகும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். சிறிய இடப் பெபெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு, தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும். வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் நான்கைந்து மாதங்கள் பூர்வீகம் வந்து செல்லலாம். பூர்வீகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக குறுகிய காலம் வெளிநாடு சென்று வரலாம். அடிக்கடி குல தெய்வ கோவிலுக்கு சென்று வரும் ப்ராப்தம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் பல மடங்கு லாபத்தை பெருக்கித்தரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும்.

பிரபலமானவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரலாம். ஏழாமிடத்திற்கு வரும் குருவின் பார்வை ராசி, மூன்று மற்றும் பதினொன்றாமிடத்திற்குபதிவதால் பல்வேறு சுப பலன்கள் தேடி வரும் நேரம் வந்துவிட்டது. கணுக்கால் மற்றும் மூட்டு வலிக்கு செய்யும் சிகிச்சைகள் நல்ல பலன் தரும். கலைத் துறையினர் ஏற்றம் பெறுவார்கள். மன சஞ்சலத்தை ஏற்படுத்தி வந்த கோர்ட் பிரச்சனைகள் சாதமாகும்.

திருமணத் தடை நீங்கும்

எப்பொழுது இந்த வீட்டில் மேளச் சத்தம் கேட்கும் என்று எதிர்ப்பார்த்த பெற்றோருக்கும் திருமண வாய்ப்பு என் வாழ்வில் எப்பொழுது நடக்கும் என கனவு கண்ட கன்னியரும் காளையரும் திருமண நாளை எண்ணும் காலம் வந்து விட்டது. ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் இருப்பதால் சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடை ஏற்பட்டு இருக்கும்.தற்போது ராகு பகவான் 12ம் இடத்திற்கும் கேது பகவான் 6ம் இடத்திற்கும் செல்வதால் சுய ஜாதகத்தில் ஏழாமிட வலிமை மற்றும் தசா புக்திக்கு ஏற்ப திருமணம் நடக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும்.

மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுலபமாக நடைபெறும். திருமணத்திற்கும் ஏழரைச் சனிக்கும் சம்பந்தம் இல்லை. முன்னோர்களின் பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகளை மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி முடிப்பது நலம். பெரும் முதலீட்டு விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும். கார்பரேட் விவசாய நிறுவனங்களுக்கு உபரி உற்பத்தி கிடைக்கும்.

பொருளாதாரம்

வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். மன நிறைவும், நிம்மதியும் ஏற்படும். களத்திரத்தின் மூலம் பொருளாதாரம் ஏற்படும். வருவாய் அதிகரித்து சேமிப்பு உயரும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். திடீர் அதிர்ஷ்டம், விபரீத ராஜயோகம் எதிர்பாராத பண வரவு வேற்று மத, இன நண்பர்கள் மூலம் கிடைக்கும்.

நல்ல அனுபவமுள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பெரும் பொருள் ஆதாயம் உண்டு. கடன் கொடுக்க வீடு தேடி வரும். குருவின் வக்ர காலத்தில் வாங்கும் கடனை திரும்ப கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படலாம். இனம் புரியாத நோய் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். அண்டை அயலாருடன் தேவையில்லாத மனக் கசப்பு, தொந்தரவு வரும். வாடிக்கையாளர்களால் வம்பு, வழக்கு உருவாகும்.பங்குதாரர்கள், தொழில் கூட்டாளிகளிடையே நம்பகத்தன்மை குறையும்.

பெண்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு உயரும். அடமானத்தில் இருந்த நகைகள் வீடு வந்து சேரும். வாக்கு வன்மை பெறும். கொடுத்த வாக்கை எளிதாக காப்பாற்றி விடுவீர்கள். தன வரவு இரட்டிப்பாகும். செலவுகளைகுறைத்துக் கொண்டால் சேமிப்பு உயரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.பல பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் புதிய தொழில் முனைவர்களாக மாறுவார்கள். கணவர் மற்றும் குழந்தைகளின் முழுமையான அன்பை உணர்வீர்கள். தாய் வழிச் சொத்தும் நல்லாசிகளும் கிடைக்கும்சுப நிகழ்வுகள், ஆடம்பர விருந்துகள், ஆடம்பர உணவு விடுதிக்கு செல்லுதல் போன்ற பொழுபோக்கு இடங்களுக்கு சென்று உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.

மாணவர்கள்

பள்ளியில் ஆசிரியர் நடத்தும் போதே மனதில் பதிய வைத்து விடுவீர்கள். கல்வியில் ஆர்வம் மிகும்சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர், மாணவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படிக்கும் கும்ப ராசி மாணவர்கள் மாநில, மாவட்ட, பள்ளி அளவில் முதல் மாணவ மாணவியராக தேர்வடைவார்கள். சுமாராக படித்த மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் ஸ்திரத் தன்மை ஏற்படும்.குடும்ப சூழ்நிலை காரணமாக பொருத்தமில்லாத வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கும் திறமைக்கும், படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். ஆனால் வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் கை கூடி வரும். மேல் அதிகாரிகளுக்கு உங்கள் மேல் உள்ள வெறுப்பால் அதிக பணிச்சுமை ஏற்படும். விரும்பிய சலுகைகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலனும் ஆதாயமும் உண்டு.

இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனம் கிடைக்கும். நல்ல தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறும். குருவின் வக்கிரக காலத்தில் யாரையும் நம்பி பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது. நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் தொழில் தொடர்பு வைக்க கூடாது. முதலாளி, தொழிலாளி சிறு சிறு பிணக்குள் அவ்வப்போது தோன்றி மறையும். ஜனன கால தசாபுத்தி சாதகமாக இல்லாத சிலருக்கு சட்ட சிக்கல் வீடு தேடி வரும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழில் செய்பவர்கள் பேச்சில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்குசம்பந்தம் இல்லாத வாரிசற்ற முன்னோர் சொத்திற்கு ஆசைப்பட்டு இருக்கும் பொன், பொருளையும் ஏமாந்து பிறருக்கு கொடுத்து பின்னர் அதற்கு வருந்துவீர்கள்.

அரசியல்வாதிகள்

பொதுமக்கள் ஆதரவு நமக்கு தான் என்ற பிரம்மாண்ட எண்ணம் தோன்றும். மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மிகுதியாகும். சில அரசியல் பிரமுகர்கள் அரசியல் களத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில் மருத்துவ மனையில் போய் சேர்ந்து விடுவார்கள். வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியான விமர்சனங்கள்,வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். கட்சியில் உயர் பதவிகள், தலைமைப் பதவிகள் தேடிவரும். திறமைக்கும், தகுதிக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். கட்சி மேலிடம் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படும். குருவின் வக்ர காலத்தில் கெளரவ பதவிகள் ஆட்டம் காட்டும்.

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு பால் மற்றும் மஞ்சள் பொடியால் அபிசேகம் செய்து வர கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் மேம்படும். தினமும் திருக்கோளாறு பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT