ராசிபலன்

தனுசு- 2026 தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்

பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள்.

தனுசு

அதிர்ஷ்டம் அரவணைக்கும் திட்டமிட்டு செயல்படும் தனுசு ராசியினருக்கு பிறக்கப் போகும் பராபவ ஆண்டு அதிர்ஷ்டம் அரவணைக்க போகும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். ஆண்டு முழுவதும் சனிபகவான் 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் நின்று அர்தாஷ்டமச் சனியாக பலன் தருவார்.

வருட தொடக்கத்தில் சம சப்தம ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் 2.6.2026 அன்று அஷ்டம ஸ்தானத்தில் உச்சமடைய போகிறார். 5.12.2026 வரை 3ம்மிடமான உப ஜெய ஸ்தானத்தில் ராகு பகவானும் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள்.அதன் பிறகு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானும் அஷ்டம ஸ்தானத்திற்கு கேது பகவானும் செல்வார்கள்.

பராபவ ஆண்டு பொது பலன்கள்

இலக்கை நிர்ணயித்து செயல்படும் தனுசு ராசியினருக்கு பராபவ ஆண்டு பல்வேறு சுப பலன்களை வழங்க உள்ளது. ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு சென்றாலும் அவரின் பார்வை 2, 4, 6ம் இடங்களில் பதிவதால் நேர்மறை ஆற்றல் பெருகும்.குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை பெருகும்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அக்கறை கொள்வீர்கள்.வாக்கு வன்மை கூடும். பேச்சால் குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்துவீர்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன மன ஸ்தாபங்கள் முடிவிற்கு வரும்.

புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும்.அதிர்ஷ்டத்தை நம்பி கால விரயம் செய்வீர்கள்.

இதனால் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்படலாம். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அனைத்து விதமான நற்பலன்களும் நடக்கும்.பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும்.

புதிய தொழில் துவங்கும் விரும்பம் உள்ளவர்கள் கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை, வெளிநாட்டு பொருள் இறக்குமதி, கமிஷன் தொழில் செய்யலாம்.

வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும்.வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.

தந்தையுடன் நல்லுறவு ஏற்படும். நண்பர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும்.சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.

முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.

மூலம்

திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும் வருடம். அனைத்து முயற்சிகள் வெற்றியாக அமையும். மனதில் தைரியம் குடிபுகும்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும் பூர்வீகச் சொத்துக்களின் மூலம் வருமானம் கிடைக்கும்.

தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை,தாமதம்,இன்னல்கள் நீங்கி அற்புதமான சுப பலன்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆன்லைன் சாதனங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிவீர்கள்.

பூராடம்

மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும் வருடம்முட்டுக் கட்டைகள் அகலும். முயற்சிகள் உடனே பலிதமாகும்.புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை, நாணயம் உயரும். உங்களின் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

இடமாற்றம் ,தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாட்டு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றங்கள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும். தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம். இதுவரை அரசுவழி ஆதாயம் ,உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும்.

திருமண வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும்.பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

உத்திராடம் 1

வெற்றி மேல் வெற்றி தேடி வரும் வருடம்.தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும்.எதிர்காலத் தேவைக்காக திட்டமிடுவீர்கள். மனவேதனை மாறும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.பணிகளை விரைந்து முடிப்பதில் வேகம், விவேகம் இருக்கும். வாழ்வியல் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி நடக்கும்.வீடு மாற்றம் ஊர் மாற்றம் நாடு மாற்றம் வேலை மாற்றம் என அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப விரும்பத் தகுந்த மாற்றங்கள் நடக்கும்.

உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகி பாகப்பிரிவினை சுமூகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காணாமல் போன பொருட்கள் தென்படும்.கமிஷன் அடிப்படையான தொழிலில் லாபம் கூடுதலாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். ஆரோக்கியம் சீராகும்.

பயணங்கள் மிகுதியாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும்.

திருமணம்

ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நின்று குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால்பல வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும்.

பொருளாதாரம்

திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும்.தடைகள் விலகி மன நிம்மதி கூடும்.பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக செயல்படும். வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும்.

ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும்.மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.செலவுகள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த வரவும் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பெண்கள்

சொல்லாலும் செயலாலும் ஒன்று பட முடியும். நிகழ்கால, எதிர்கால தேவைகள் பூர்த்தியாக கூடிய வகையில் தாராள தன வரவு உண்டாகும்.தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும்.அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.

அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பலன் தரும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவீர்கள். புத்திர பிராப்தம் உண்டாகும்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்.

பரிகாரம்

மும்மூர்த்திகளின் அருளையும் வழங்க கூடிய தத்தாத்ரேயரை வழிபட ஆனந்தமான மாற்றங்கள் ஏற்படும்.