உண்மை எது

எனது தந்தை உயிரிழக்கவில்லை.. அமர்த்தியா சென் மகள் நந்தனா விளக்கம்!

எனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

மாலை மலர்

பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் உயிரிழந்துவிட்டதாக இன்று மாலை முதலே தகவல்கள் வெளியாகி வந்தன. பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் உயிரிழந்ததாக எக்ஸ் தளத்தில் வெளியான தகவல் காட்டுத்தீ போன்று வேகமாக பரவியது.

இந்த நிலையில், அமர்த்தியா சென் உயிரிழக்கவில்லை என்று அவரின் மகள் நந்தனா சென் தெரிவித்து உள்ளார். மேலும் தனது தந்தை உயிரிழந்ததாக வெளியான தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார். இத்துடன் தனது தந்தையுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், " கவலை தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ஆனால் அது ஒரு பொய்யான செய்தி. பாபா நலமுடன் இருக்கிறார். கேம்ப்ரிட்ஜ்-இல் கடந்த வாரம் தான் நாங்கள் அருமையான நாட்களை குடும்பத்தோடு கழித்தோம்."

"அவரின் அரவணைப்பை போன்று அவர் உறுதியாகவே இருக்கிறார். அவர் ஹார்வார்டில் வாரத்திற்கு இரண்டு முறை பாடம் எடுத்து வருகிறார். அவர் எப்போதும் போன்று பிசியாகவே இருக்கிறார். அவர் தனது புத்தகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.