மேஷம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கூடுதல் விரயங்கள் உண்டு. அலுவலகப் பணிகளில் யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது.
ரிஷபம்
பயணத்தால் பலன் கிட்டும் நாள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. திருமணத்தடை அகலும்.
மிதுனம்
முயற்சி கைக்கூடும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
கடகம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தி ஒன்று தொலைபேசி மூலம் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
சிம்மம்
வருமானம் திருப்தி தரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு.
துலாம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சிக்கலான காரியங்களைக்கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள், வாகன யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு.
தனுசு
செல்வ வளம் பெருகும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
மகரம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு.
கும்பம்
பிரச்சனைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும்.
மீனம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள், அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். பயணங்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.