மேஷம்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர்.
ரிஷபம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் பிறர் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.
மிதுனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றி - புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கடகம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். ஆக்கப் பூர்வமான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும்.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கான முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். தனவரவு திருப்தி தரும்.
கன்னி
செல்வநிலை உயரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
துலாம்
சுப செலவுகள் ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
விருச்சிகம்
ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
தனுசு
சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும்.
கும்பம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் உயரும். வருங்கால நலன்கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.
மீனம்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும் நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.