இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். எதையும் யோசித்து செய்வது நல்லது. முயற்சியில் தாமதம் ஏற்படலாம்.

ரிஷபம்

எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கடகம்

விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும்.

சிம்மம்

சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

கன்னி

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணவரவு திருப்தி தரும், விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

துலாம்

நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

விருச்சிகம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். வி.ஐ.பி. க்களின் சந்திப்பு உண்டு. எடுத்த காரியம் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு

உற்சாகம் அதிகரிக்கும் நாள். உறவினர்களின் மனக்கசப்பு மாறும், உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

மகரம்

நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். பயணங்களால் அலைச்சல்களும் அதிக செலவும் ஏற்படலாம்.

கும்பம்

யோகமான நாள், விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர்.

மீனம்

மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.