இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.11.2026- இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாழ்வில் புகழ் கூடும்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

கடகம்

வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்திலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

சிம்மம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள் கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றும் முயற்சி கைகூடும். பணிகளில் இருந்த தொய்வு அகலும்.

கன்னி

தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.

துலாம்

வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கும் நாள். உங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

விருச்சிகம்

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.

தனுசு

விரயங்கள் ஏற்படும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தினர் களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.

மகரம்

மதி நுட்பத்தால் மகத்தான காரியத்தைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். நிலம் சம்பந்தமாக எடுத்த முடிவு பலன் தரும்.

கும்பம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். உறவு பகை பாராமல் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோ சுத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

SCROLL FOR NEXT