இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு உண்டு...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொடர்கதையாய் வந்த கடன்சுமை குறையும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

ரிஷபம்

யோகமான நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும்.

மிதுனம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். தொழில் சீராக நடைபெறும்.

கடகம்

பக்குவமாகப் பேசிப் பாராட்டுப் பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

சிம்மம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கன்னி

நம்பிக்கைகள் நடைபெறும் நாள், சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக மாற்றம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபார விருத்திக்காக புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள்.

விருச்சிகம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழிலில் மறைமுகப் போட்டிகள் உண்டு. வாகன வழியில் செலவு ஏற்படும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

தனுசு

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவைவிடச் செலவு கூடும்.

மகரம்

மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

கும்பம்

வளர்ச்சி ஏற்படும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள், பொதுவாழ் வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

மீனம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள், பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

SCROLL FOR NEXT