இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளா தீர்கள். எதையும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது.

ரிஷபம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதியவர்களை நம்பி செயல்பட வேண்டாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை.

மிதுனம்

பிரச்சினையிலிருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும்.

கடகம்

புகழ் கூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சியுண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடம், வாங்கும் முயற்சி கைகூடும்.

சிம்மம்

நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.

கன்னி

மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சிறப்படைவீர்கள். கடன்சுமை குறைய எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும்.

துலாம்

உறவினர்கள் ஒத்துழைப்புச் செய்யும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தியளிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

விருச்சிகம்

நினைத்தது நிறைவேறும் நாள், வளர்ச்சிக்கு வழிகாட்டிய வர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். விண்ணப்பித்த வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.

தனுசு

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக் கும். பொருளாதார நெருக்கடி அகலும். சுபவிரயங்களைச் செய்வது நல்லது.

மகரம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.

கும்பம்

சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

மீனம்

யோகமான நாள். பணவரவு உண்டு. பக்கபலமாக இருப்பவர்கள் பிரச்சினைகள் தீர வழிகாட்டுவர். உத்தியோ சுத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

SCROLL FOR NEXT