இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

செல்வாக்கு உயரும் நாள். சேமிக்கும் எண்ணம் செயல்படும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். பெற்றோர் வழிப் பிரச்சினைகள் தீரும்.

ரிஷபம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள், நல்ல மனிதர்களின் கிடைக்கும். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுனம்

இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகப் பிரச்சினை அகலும்.

சிம்மம்

தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

கன்னி

யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.

துலாம்

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது. விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை.

விருச்சிகம்

மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரிய மொன்றில் செலவுகள் ஏற்படும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

தனுசு

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக முயற்சி கைகூடும்.

மகரம்

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பாதியில் நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.

கும்பம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

மீனம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர்.

SCROLL FOR NEXT