இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வரன்கள் வாயில் தேடி வரும்.

ரிஷபம்

கவலை தீரக் கண்ணனை வழிபட வேண்டிய நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களால் நன்மை உண்டு.

மிதுனம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

கடகம்

யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

சிம்மம்

நினைத்தது நிறைவேறும் நாள். வரன்கள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

துலாம்

எதிலும் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

விருச்சிகம்

கீர்த்திகள் பெருக கிருஷ்ணரை வழிபட வேண்டிய நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் ஏற்படும்.

தனுசு

தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் தொடர்பாக செல்வந்தர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.

மகரம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்

வருமானம் இருமடங்காகும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்

முன்னேற்றம் கூடும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிக கேட்ட சலுகைகளைத் தருவர்.