இன்றைய ராசி பலன்கள்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.8.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கனவுகள் நனவாகும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

நட்பால் நன்மை ஏற்படும் நாள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் நல்ல காரியம் விரைவாக நடைபெறும்.

மிதுனம்

எதிரிகள் விலகும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.

கடகம்

குடும்பச்சுமை கூடும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

சிம்மம்

விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாகனப் பராமரிப்புச் செலவுகளால் வாட்டம் ஏற்படும்.

கன்னி

கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக 2 இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

துலாம்

தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விட்டு விலகும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

விருச்சிகம்

கனவுகள் நனவாகும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

தனுசு

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை ஏற்படும்.

மகரம்

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.

மீனம்

பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்தை விற்றுப் புதிய சொத்தை வாங்குவீர்கள்.