search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lucknow Super Giants"

    • அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    அதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. மந்தமாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 20 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.

    அவர் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாண்ட்யா 16 ரன்னிலும் வதேரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் நமன் வெற்றிக்காக போராடினர். அதிரடியாக விளையாடிய நமன் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - படிக்கல் களமிறங்கினர்.

    படிக்கல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 28 ரன்னிலும் ஹூடா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேஎல் ராகுலுடன் பூரன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய பூரன் 19 பந்தில் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அர்ஷத் கான் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் போன போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து ஓவரில் கேஎல் ராகுல் 55 ரன்களுடன் வெளியேறினார்.

    69 ரன்னில் 3-வது விக்கெட்டை இழந்த லக்னோ அணி 178 ரன்னில் 4-வது விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்த 1 ரன்னை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் பதோனி மற்றும் குர்ணால் பாண்ட்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • டெல்லி அணிக்கு எதிராக லக்னோ தோல்வியை தழுவியது.
    • இதனால் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    3 மற்றும் 4-வது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவும். டெல்லி மற்றும் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வருவது நடக்காத காரியமாக மாறிவிட்டது.

    • கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி அபிஷேக் போரெல் மற்றும் ஸ்டப்ஸ் அதிரடியால் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - டி காக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 5, ஸ்டோய்னிஸ் 5, ஹூடா 0, டி காக் 12, பதோனி 6 என சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    அந்த நிலையில் பூரன் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஜோடி பொறுப்புடன் ஆடினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பூரன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 27 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து குர்ணால் பாண்ட்யா 18 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து அர்ஷத் கான் மற்றும் யுத்வீர் சிங் சரக் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். யுத்வீர் சிங் சரக் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ அணியின் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    டெல்லி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 33 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் பட்டேல் முறையே 57 மற்றும் 14 ரன்களை சேர்த்தனர். போட்டி முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

    லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது.
    • லக்னோ அணி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    லீக் சுற்றில் இன்று தனது கடைசி போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுகிறது. அந்த வகையில், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி அணி களமிறங்குகிறது. லக்னோ அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. 

    • லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.
    • இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இருந்து வருகிறது.

    அந்த வகையில், ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.

     


    தனது அணி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுலை களத்தில் வைத்தே மிகவும் கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது.
    • இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சில சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கேஎல் ராகுல் டி20 போட்டிகளில் 7500 ரன்கள் குவித்துள்ளார். அபிஷேக் சர்மா இன்று தனது 100-வது டி20 போட்டியில் விளையாடினார்.

    அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2022-ம் ஆண்டு 1062 சிக்சர்களும், 2023-ம் ஆண்டு 1124 சிக்சர்களும் அடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிரடியாக விளையாடிய ஹெட் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் விளாசி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், இந்த சீசனில் 2-வது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 107/0 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிஷேக் சர்மா 75 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 89 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • இறுதியில் ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 66 ரன்னில் 4 விக்கெட்டை திணறிய லக்னோ அணிக்கு பதோனி மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். பதோனி 55 ரன்களிலும் பூரன் 48 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ருத்ரதாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா அரை சதம் அடித்தார்.

    அபிஷேக் சர்மா 75 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 89 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல்- டி காக் களமிறங்கினர். 2 ரன்னில் டி காக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 3 ரன்னில் வெளியேறினார். 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் கேஎல் ராகுலுடன் குர்ணால் பாண்ட்யா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

    குர்ணால் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்திருந்த போது 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். டெஸ்ட் போட்டி போல விளையாடிய கேஎல் ராகுல் 33 பந்துகளில் 29 பந்துகளில் வெளியேறினார்.

    இதனையடுத்து பதோனி மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். பதோனி 55 ரன்களிலும் பூரன் 48 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது.

    இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×