search icon
என் மலர்tooltip icon

    கார்

    • இரு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV ஆகும்.
    • சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என அழைக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரெனால்ட்-நிசான் அலையன்ஸ் சார்பில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். தற்போது இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV என்பது தெரியவந்துள்ளது.

    டேசியா டஸ்டர் மாடலின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் க்விட் EV மாடல் சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் முகப்பு பகுதியில் கிரில் மூடப்பட்டு முற்றிலும் புதிய டிசைன் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இத்துடன் கிரில் பகுதியின் மத்தியில் அளவில் பெரிய DC லோகோ இடம்பெற்று இருக்கிறது. இதுவே காரின் சார்ஜிங் டாக் ஆகவும் செயல்படும் என்று தெரிகிறது. வெளிப்புற தோற்றத்தில் இந்த கார் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் அலாய் வீல் வித்தியாசமாகவும், ரூஃப் ரெயில் மற்றும் டோர் கிளாடிங்கில் புளூ அக்சென்ச்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதே போன்று காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் க்விட் எலெக்ட்ரிக் மாடலில் 26.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 43 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய க்விட் EV மாடல் பன்ச் EV, சிட்ரோயன் eC3, டியாகோ EV மற்றும் எம்.ஜி. கொமெட் EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    • முந்தைய மாதத்தை விட 37 சதவீதம் அதிகம் ஆகும்.
    • அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.

    இந்திய பயணிகள் வாகன சந்தைக்கு 2024 ஆண்டின் முதல் மாதம் நல்லவிதமாக அமைந்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 471 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 14 சதவீதமும், அதற்கும் முந்தைய மாதத்தை விட 37 சதவீதமும் அதிகம் ஆகும். வாகனங்கள் விற்பனையானது டாப் 10 அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.

    அந்த வகையில், ஜனவரி 2024 மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    மாதாந்திர விற்பனை விவரம்:

    மாருதி சுசுகி பலேனோ 19 ஆயிரத்து 630 யூனிட்கள்

    டாடா பன்ச் 17 ஆயிரத்து 978 யூனிட்கள்

    மாருதி சுசுகி வேகன்ஆர் 17 ஆயிரத்து 756 யூனிட்கள்

    டாடா நெக்சான் 17 ஆயிரத்து 182 யூனிட்கள்

    மாருதி சுசுகி டிசையர் 16 ஆயிரத்து 773 யூனிட்கள்

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 15 ஆயிரத்து 370 யூனிட்கள்

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா 15 ஆயிரத்து 303 யூனிட்கள்

    மாருதி சுசுகி எர்டிகா 14 ஆயிரத்து 632 யூனிட்கள்

    மஹிந்திரா ஸ்கார்பியோ 14 ஆயிரத்து 293 யூனிட்கள்

    மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 13 ஆயிரத்து 643 யூனிட்கள்

    • பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்தது.
    • இரு டாடா கார்களை பாதுகாப்பானவை என்று GNCAP அறிவித்து இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நெக்சான் மாடல் குளோபல் என்கேப் என்கிற GNCAP டெஸ்ட்களில் பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் நெக்சான் தொடர்ந்து பாதுகாப்பான காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்சான் வெர்ஷனும், பாதுகாப்பிற்கு ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பரிசோதனையில் டாடா நெக்சான் மாடல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முறையே 34-க்கு 32.22 புள்ளிகளையும் 49-க்கு 44.52 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது.

     


    சமீபத்தில் தான் டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களை பாதுகாப்பான கார்களாக GNCAP அறிவித்து இருந்தது. தற்போது நெக்சான் மாடல் இரண்டாவது இடம்பிடித்துள்ளது. பாதுகாப்பிற்கு டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஆறு ஏர்பேக், ESC, ABS மற்றும் EBD, சீட்பெல்ட் ரிமைன்டர்கள், ISOFX மவுன்ட்கள் ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் பிலைன்ட் வியூ மானிட்டர், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, ஃபாக் லேம்ப் மற்றும் கார்னெரிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    • டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சமீபத்தில் எம்.ஜி. நிறுவனம் தனது கொமெட் EV விலையை குறைத்தது.

    இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி டாடா நெக்சான் EV விலை அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

    உலகளவில் பேட்டரி செல்களின் விலை கணிசமாக குறைந்து இருப்பதே திடீர் விலை குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக டாடா நெக்சான் EV மாடலின் பேஸ் வேரியன்ட் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என்று மாறி இருக்கிறது.

     


    டாடா நெக்சான் EV மாடலுக்கு குறைந்தபட்சமாக ரூ. 20 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து ஆயிரமும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டாடா டியாகோ EV மாடலின் விலை குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    தற்போதைய விலை குறைப்பு டாடா நெக்சான் EV மற்றும் டாடா டியாகோ EV தவிர டாடாவின் இதர எலெக்ட்ரிக் கார்களுக்கு பொருந்தாது. சமீபத்தில் எம்.ஜி. நிறுவனமும் தனது கொமெட் எலெக்ட்ரிக் காரின் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    • 40 சதவீதம் வாடிக்கையாளர்கள் டாப் என்ட் மாடல்களை தேர்வு செய்துள்ளனர்.
    • 80 சதவீதம் பேர் பானரோமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்தனர்.

    கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தை தொடர்ந்து இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. இந்த நிலையில், புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன்பதிவில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13 ஆயிரத்து 500 யூனிட்கள் வரை முன்பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளில் 80 சதவீதம் வாடிக்கையாளர்கள் டாப் என்ட் மாடல்களையே தேர்வு செய்துள்ளனர்.

     


    கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் ADAS சூட் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர். 80 சதவீதம் பேர் பானரோமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர். இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் மட்டுமே 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

    பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் இந்த காரை வாங்க 31 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இந்திய சந்தையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    • மாருதி எர்டிகா மாடல் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • இதன் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்.பி.வி. மாடல் இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியது. கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாருதி எர்டிகா மாடல் விற்பனையில் 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம், மாருதி எர்டிகா மாடல் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய எம்.பி.வி. என்ற பெருமையை பெற்றது.

    எம்.பி.வி. மாடல்கள் சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா 37.5 சதவீத பங்குகளை பெற்றிருக்கிறது. இந்த கார் LXi (O), VXi (O), ZXi (O) மற்றும் ZXi பிளஸ் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மாருதி எர்டிகா மாடலின் விலை தற்போது ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

     


    அறிமுகமான முதல் ஆண்டிலேயே எர்டிகா மாடல் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. பிறகு, 2019 ஆண்டு ஐந்து லட்சம் யூனிட்களை கடந்தது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் மாதாந்திர அடிப்படையில் சராசரியாக 10 ஆயிரம் யூனிடகள் வரை விற்பனையாகி வருகிறது.

    மூன்றடுக்கு இருக்கை கொண்ட எம்.பி.வி. பிரிவில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் XL6 மற்றும் இன்விக்டோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
    • பலன்கள் மாடல், வேரியன்ட், நிறம் மற்றும் இதர காரணங்களால் வேறுபடலாம்.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஹோண்டா கார்களுக்கு பிப்ரவரி மாத சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் ஹோண்டா அமேஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 36 ஆயிரத்து 246 மதிப்பிலான இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் அமேஸ் எலைட் எடிஷனுக்கு ரூ. 30 ஆயிரம் வரை சிறப்பு பலன்கள் வழங்கப்படுகின்றன.

     


    ஹோண்டா சிட்டி மாடலின் பெட்ரோல் வேரியன்ட்களுக்கு ரூ. 1 லட்சத்து 11 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஹைப்ரிட் வேரியன்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகள் பிப்ரவரி 29-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    பிப்ரவரி மாத சலுகைகள் ஒவ்வொரு பகுதி, விற்பனை மையம், மாடல், வேரியன்ட், நிறம் மற்றும் இதர காரணங்களால் வேறுபடலாம்.

    • அக்சஸரீக்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வடிவில் வழங்கப்படுகின்றன.
    • மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவன விற்பனையாளர்கள் பொலிரோ சீரிஸ் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களை அறிவித்துள்ளன. இதில் பொலிரோ 2023 மற்றும் 2024 மாடல்கள் பயன்பெறுகின்றன. இந்த சலுகைகள் பொலிரோ, பொலிரோ நியோ மற்றும் மராசோ மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன.

    கார்களுக்கான சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி, அக்சஸரீக்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வடிவில் வழங்கப்படுகின்றன.

    அதன்படி 2023 பொலிரோ நியோ மாடலின் டாப் என்ட் N10 மற்றும் N10 (O) வேரியன்ட்களை வாங்குவோருக்கு முறையே ரூ. 69 ஆயிரம் மற்றும் ரூ. 84 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. 2024 பொலிரோ நியோ N4 மற்றும் N8 வேரியன்ட்களுக்கு முறையே ரூ. 46 ஆயிரம் மற்றும் ரூ. 54 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. 2024 N10 மற்றும் N10 (O) வேரியன்ட்களுக்கு ரூ. 73 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     


    2023 பொலிரோ மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 98 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதன் B4 மற்றும் B6 வேரியன்ட்களுக்கு முறையே ரூ. 75 ஆயிரம் மற்றும் ரூ. 73 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன. 2024 B4, B6 மற்றும் B6 (O) வேரியன்ட்களுக்கு முறையே ரூ. 61 ஆயிரம், ரூ. 48 ஆயிரம் மற்றும் ரூ. 82 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. என்ட்ரி லெவல் மாடலுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    மஹிந்திரா மராசோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 93 ஆயிரத்து 200 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் கிடைக்கிறது.

    • அந்த சீரிசில் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்தது.
    • இந்த கார் ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அமைகிறது.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் மற்றும் குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடல்கள் விலையை குறைத்து இருக்கிறது. இத்துடன் கொமெட் எலெக்ட்ரிக் கார் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக எம்.ஜி. நிறுவனம் தனது ZS EV காரின் புதிய குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்திருந்தது. இது அந்த சீரிசில் என்ட்ரி லெவல் மாடலாகவும் அமைந்தது.

    விலை குறைப்பை பொருத்தவரை எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் மாடலின் விலை தற்போது ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் என துவங்குகிறது. ஹெக்டார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களின் விலை முறையே ரூ. 6 ஆயிரம் மற்றும் ரூ. 79 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV700 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 15 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 14 லட்சத்து 03 ஆயிரம் என துவங்குகிறது.

     


    எம்.ஜி. குளோஸ்டர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரின் விலை தற்போது ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்திய சந்தையில் இந்த கார் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அமைகிறது. இதன் விலை ரூ. 35 லட்சத்து 93 ஆயிரம் என துவங்குகிறது.

    எம்.ஜி. கொமெட் எலெக்ட்ரிக் கார் விலை தற்போது ரூ. 99 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இந்திய சந்தையில் கொமெட் மாடலுக்கு போட்டியாக வேறு எந்த காரும் விற்பனை செய்யப்படவில்லை.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • விலை ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும்.
    • 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது.

    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் 2024 மாடல்களின் விலையை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், எம்.ஜி. நிறுவனம் தனது ZS EV காரின் என்ட்ரி லெவல் எக்சிகியுடிவ் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    புதிய எம்.ஜி. ZS EV மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் எக்சைட் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும்.

    புதிய வேரியண்ட்-இல் பேட்டரி மற்றும் பவர்டிரெயின் என மெக்கானிக்கல் அம்சங்கள் ரீதியாக எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 173 ஹெச்.பி. பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரை 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என ARAI சான்று பெற்றிருக்கிறது.

    • மற்ற வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
    • இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி மாதத்தில் தான் மாற்றியமைத்தது. சில மாடல்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சில கார்களின் தேர்வு செய்யப்பட்ட மாடல் மற்றும் வேரியண்டிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.

    அந்த வரிசையில் மாருதி ஜிம்னி மாடலின் சீட்டா AT, ஆல்ஃபா AT மற்றும் ஆல்ஃபா AT டூயல் டோன் போன்ற மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி.-இன் மற்ற வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    விலை மாற்றம் காரணமாக மாருதி ஜிம்னி விலை தற்போது ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் சீட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 1.5 லிட்டர், K15B பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

    • புதிய காரில் கூடுதல் அம்சங்கள், ஸ்டைலிங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
    • இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது GLA ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 50.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய காரில், அதன் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டதை விட கூடுதல் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் மாடல் - GLA200, GLA220d 4மேடிக், GLA 220d 4மேடிக் AMG லைன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.


     

    மாற்றங்களை பொருத்தவரை GLA ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், புதிய டிசைன் கொண்ட டி.ஆர்.எல்.கள், ரிவைஸ்டு கிரில், முன்புற பம்ப்பரில் வித்தியாச வடிவம் கொண்ட ஏர் இன்டேக்குகள், புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்டீரியரில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இத்துடன் பிலைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, கீலெஸ் கோ கம்ஃபர்ட் பேக்கேஜ் மற்றும் அதிநவீன MBUX NTG7 மென்பொருள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய GLA மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 163 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 193 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் DCT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ×