search icon
என் மலர்tooltip icon

    கார்

    முன்பதிவில் புதிய மைல்கல் எட்டிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
    X

    முன்பதிவில் புதிய மைல்கல் எட்டிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

    • 40 சதவீதம் வாடிக்கையாளர்கள் டாப் என்ட் மாடல்களை தேர்வு செய்துள்ளனர்.
    • 80 சதவீதம் பேர் பானரோமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்தனர்.

    கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தை தொடர்ந்து இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. இந்த நிலையில், புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன்பதிவில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13 ஆயிரத்து 500 யூனிட்கள் வரை முன்பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளில் 80 சதவீதம் வாடிக்கையாளர்கள் டாப் என்ட் மாடல்களையே தேர்வு செய்துள்ளனர்.


    கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் ADAS சூட் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர். 80 சதவீதம் பேர் பானரோமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர். இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் மட்டுமே 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

    பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் இந்த காரை வாங்க 31 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இந்திய சந்தையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    Next Story
    ×