என் மலர்
ஆன்மிகம்
- காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் விடாயாற்று உற்சவம்.
- தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-23 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி இரவு 8.17 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : சித்திரை நண்பகல் 12.10 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீரங்கம், திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் விடாயாற்று உற்சவம். திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னர்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கிழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-சாந்தம்
கடகம்-போட்டி
சிம்மம்-நட்பு
கன்னி-ஆதரவு
துலாம்- கடமை
விருச்சிகம்-சிறப்பு
தனுசு- உழைப்பு
மகரம்-தேர்ச்சி
கும்பம்-பரிசு
மீனம்-ஆக்கம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம்.
ரிஷபம்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்ற குழப்பம் அகலும்.
மிதுனம்
நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கடகம்
விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாங்கல். கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.
கன்னி
பாக்கிகள் வசூலாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் வளர்ச்சிக்கு உதவுவர். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
தனுசு
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. சகோதர ஒற்றுமை பலப்படும்.
மகரம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
கும்பம்
தனவரவு திருப்தி தரும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திட்ட மிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள்.
மீனம்
அலைச்சல் அதிகரித்து ஆதாயம் குறையும் நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். வரவை எதிர்பார்த்து செய்த காரியம் ஒன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கலாம்.
- தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோவிலாக மூலை அனுமார் கோவில் விளங்குகிறது.
- தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டேன் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார்.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற சனி தோஷம் போக்கும் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மானால் கட்டப்பட்டது. தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோவிலாக மூலை அனுமார் கோவில் விளங்குகிறது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட நவகிரகங்களை தன் பலத்தால் விடுதலை ஆக்கியவர் அனுமார். இதன் பலனாக தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டேன் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார். இவரை வழிபடுபவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி ஆற்றலும் மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் என்பது வரலாறு.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மூலை அனுமார் கோவிலில் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி அன்றும் மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். சனிதோஷம் நீங்க மூலை அனுமாரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.
அதன்படி இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் பரிகார அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை தரிசனம் செய்தார்கள்.
- ஸ்ரீ விஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
- நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில் உள்ளது. விஸ்வாமித்ர மகரிஷியால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது. சில நூறாண்டுகளுக்கு முன்பு, விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. இந்த விஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர மகாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு, பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம்.
நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன. 9 கலசங்களில் 9 விதமான திரவப் பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாகனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த 9 கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள். அதன் பிறகு, அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் 3 முறையும், வலது பக்கம் 3 முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.
அதன் பிறகு, மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும். இப்படி 3 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்த பின்னர், கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு, அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார். நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி, (வேறு ஆடை அணிந்து விட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.
உடனே, கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும். தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள், எள் பதார்த்தம், பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும். பின்பு வேறு எந்த கோவிலுக்கும், யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்படிச் செய்வதால் பிரேத சாபம், நவக்கிரக சாபம், குரு சாபம், குல தெய்வ சாபம் உள்ளிட்ட 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும் என்கின்றனர் பக்தர்கள். இதில் மாந்தி தோஷமும் அடங்கும்.
- பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை பெருவிழாவிற்கான, கொடியேற்றம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 27-ந்தேதி நடக்கிறது. 30-ந்தேதி சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
- சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெற்றது.
- அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் உலக பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் சனீஸ்வர பகவான் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். தற்போது இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெற்றது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர். அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய, தேவஸ்தான நிர்வாகம் இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் சவுகரியமாக நீராடும் வகையில், குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது.
- திருப்பதி கோவிலில் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
- யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ் தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம்.
அதன்படி வருகிற 19-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
அதையொட்டி கோவிலில் 17-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் 16-ந்தேதி ஏற்கப்படமாட்டாது. இருப்பினும், முக்கிய பிரமுகர்கள் மட்டும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர்.
அதேபோல் 19-ந்தேதி கோவிலில் நடக்கும் யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்கள் 18-ந்தேதி ஏற்கப்படமாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-22 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை இரவு 6.57 மணிவரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : அஸ்தம் காலை 10.26 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை
இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த நாள், வாஸ்து நாள். (காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து செய்ய நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கருர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படை வீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ் சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். பிள்ளையார்பட்டி திருவலஞ்சுழி, திருநாரையூர், உச்சிப்பிள்ளையார் கோவில், உப்பூர் கோவில்களில் ஹோமம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-லாபம்
கடகம்-சாந்தம்
சிம்மம்-போட்டி
கன்னி-நட்பு
துலாம்- ஆதரவு
விருச்சிகம்- உதவி
தனுசு- தேர்ச்சி
மகரம்-கவனம்
கும்பம்-புகழ்
மீனம்-நன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
ரிஷபம்
யோகமான நாள். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் பணி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று செயல்பட நேரிடும்.
மிதுனம்
பிரச்சனைகள் தீரும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.
கடகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். எதிர்காலம் இனிமையாக அமைய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
சிம்மம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
கன்னி
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பொருளாதார நிலை உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
வருமானம் திருப்தி தரும் நாள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். வீடு, வாங்கும் யோகம் உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
கரைந்த சேமிப்பை ஈடுகட்டும் நாள். முக்கிய முடிவு எடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பதே நல்லது. விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம்.
மகரம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூகநலப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்
தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விட்டுப்போன வரன்களை பற்றிய கவலை அதிகரிக்கும்.
மீனம்
பொருளாதார நிலை உயரும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். அலைபேசி வழித் தகவல் அனுகூலம் தரும்.
- அகத்தியர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு புண்ணிய நீர் வேண்டும் என்று சிவனை பிரார்த்தனை செய்தார்.
- சிவபெருமான் மேற்கு நோக்கி இருக்கிறார்.
கோவிலில் உள்ள சிவலிங்கம் அகத்தியர் கையால் பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்திற்குரிய சிறப்பு என்னவென்றால் மற்ற சிவலிங்கங்களில் உருண்டை வடிவில் மேல்பகுதி இருக்கும். ஆனால் இந்த லிங்கத்தில் 16 பட்டைகள் கொண்டு இருப்பதால் சோடசலிங்கம் என்று பெயர். தமிழில் இதை பூரணா கலாலிங்கம் என்றும் சொல்வர். ஆய கலைகள் 16-ம் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
அகத்தியர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு புண்ணிய நீர் வேண்டும் என்று சிவனை பிரார்த்தனை செய்தார். அப்போது வராகநதி என்று ஒரு நதி உள்ளது. இது செஞ்சி என்ற ஊரில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஓடி புதுச்சேரி கடலில் கலக்கும்.
இந்த நதியை திருக்காஞ்சிக்கு திருப்புவதற்கு சிவபெருமான் வராகருக்கு ஆணையிடுகிறார். வராகர் அவருடைய கொம்பினால் கீரி மேற்கில் இருந்து வடக்கு பக்கமாக திருப்பி விடுகிறார். இதனால் இது வராக நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி திருக்காஞ்சிக்கு அருகில் வடக்கு நோக்கி பாய்கிறது. இதற்கு அகத்தியர் சங்கராபரணி என்று பெயரிட்டு வழிபடுகிறார். சங்கரா என்றால் சிவபெருமான். பரணி என்றால் ஆபரணம். சங்கரனுக்கு ஆபரணமாக இருப்பவள் கங்கை. இதனால் சங்கராபரணி என்று அழைக்கப்பட்டது.
இந்த நதியில் இருந்து நீர் எடுத்து பூஜை செய்கிறார் அகத்தியர். 17-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது கோவில் முற்றிலும் சிதிலம் அடைந்து தண்ணீரில் இறங்கியது. அதன் பின்னர் அங்குள்ள கிராம மக்கள் இந்த கோவிலில் உள்ள விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, ஜெயிஸ்டா தேவி, அம்பாளுக்கு எதிரில் உள்ள நந்தியம்பெருமான் இவர்களை மட்டும் மீட்டு கொண்டுவந்து கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர்.
நாளடைவில் புதுச்சேரி அரசாங்கம் பணம் ஒதுக்கி 2016-ல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியது.பழமையான கோவிலில் கருங்கல்லால் ஆன குளக்கரை, படித்துறை இருந்தது என்பதற்கான 3 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அதில் முதல் கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் முதல் மதில் சுவரை 2-ம் குலோத்துங்க சோழன் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், ராஜேந்திர சோழன் படிகற்களை கட்டி கொடுத்தார் என்றும் உள்ளது. மற்றொரு கல்வெட்டில் ராஜேந்திரம் உடையார் இந்த கோவிலுக்கு நித்தியகொடி பூஜைக்கு தேவையான நெல்லை கொடுத்துள்ளார் என்றும் கல்வெட்டில் உள்ளது.
இந்த திருத்தலத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் எல்லா சிவாலயங்களிலும் ஒரு அம்பாள் மட்டுமே இருக்கும். இங்கு காமாட்சி, மீனாட்சி என்று 2 அம்பாள் சுவாமிகள் உள்ளது. ஏனென்றால் காசிக்கு நிகரான தலம் என்பதால் காசியில் அன்னபூரணி, விசாலாட்சி அருள்பாலிக்கின்றனர். விருத்தகாசி என்று அழைக்கப்படும் விருத்தாசலத்தில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை என்று 2 அம்பாள் இங்கு உள்ளனர். அதேபோன்று இங்கு காமாட்சி, மீனாட்சி என்று இரண்டு அம்பிகை உள்ளனர்.
இங்குள்ள சிவபெருமான் மேற்கு நோக்கி இருக்கிறார். பொதுவாக ரிஷிகள், தேவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் மேற்கு நோக்கி அமைந்திருக்கும். உதாரணத்திற்கு கபாலீஸ்வரர். கற்பகாம்பாள் பூஜை செய்ததால் அவர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதேபோன்று மருந்தீஸ்வரர் வால்மீகி முனிவர் பூஜை செய்ததால் அவர் மேற்கு நோக்கி இருக்கிறார்.
அதேபோல் முருகன் பூஜை செய்ததால் வைத்தீஸ்வரன்கோவில் மேற்கு நோக்கி இருக்கும். மார்க்கண்டேயர் பூஜை செய்ததால் திருக்கடையூரில் சிவலிங்கம் மேற்கு நோக்கி இருக்கும். அதேபோல் அகத்தியர் பூஜை செய்ததால் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். ஆயிரம் கிழக்கு நோக்கி இருக்கும் லிங்கத்தை தரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே புண்ணியம் ஒரு மேற்கு நோக்கிய சிவபெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கும்.
- 3 வகையான கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
- முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் உலக பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் சனீஸ்வர பகவான் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். தற்போது நாளை (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
விழா ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் இஷிதா ரதி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய, தேவஸ்தான நிர்வாகம் இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, இலவச தரிசன வரிசை, கட்டணம் செலுத்தும் சிறப்பு தரிசன வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி டிக்கெட்டுகள் பெறுவதற்காக, 15 இடங்களில் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் சவுகரியமாக நீராடும் வகையில், குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது.
மேலும் விழாவுக்கு இலவச கட்டுப்பாட்டு அறை எண்களாக 1070 மற்றும் 1077 செயல்பட்டு வருகிறது. அவசர உதவிக்கு 83002-61071 என்ற செல்போன் எண்ணை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு பக்தர்கள் வந்து குவிய தொடங்கியுள்ளனர். அங்குள்ள தங்கும் விடுதிகளும் நிரம்பி வருகிறது.
கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருவதால் கோவில் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தான் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு, இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.
- விநாயகர் மிக எளிமையான தெய்வம் என்பதனால் அவரை உடலை வருத்தி, கடுமையான விரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
மாசி மாதத்தில், சக்தி சிவத்தோடு ஐக்கிய மாவதால் இந்த மாதத்தில் மங்களகரமான விஷயத்தை செய்யலாம். சிவனும், சக்தியும் இணைந்து முழுமை பெறுவதால், தன்னுடைய கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்வது நடைமுறையாக உள்ளது. அதனால்தான், இதனை மாங்கல்ய மாதம் என்றும் சொல்வார்கள்.
அகிலத்திற்கே தாயாக விளங்கும் பார்வதி தேவியே மகன் விநாயருக்கான சதுர்த்தி விரதம் இருந்து தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார் என புராணங்கள் சொல்கின்றன. விநாயகருக்கு கணபதி என்றொரு திருநாமம் உண்டு. இதற்கு கணங்களின் அதிபதி என்று பொருள்.
ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாக பிரித்து, அதன் அடிப்படையிலேயே திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதற்கு கணப்பொருத்தம் என்பார்கள். இந்த கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தான் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு, இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அதனால் தான் திருமணத்தில் தடை உள்ளவர்கள், திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள், கணவன்-மனைவி ஒற்றுமை, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு கணபதியை வழிபட்டால் அவர் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள், பிரச்சனைகள் அனைத்தையும் விலக்கி இனிமையான வாழ்க்கையை வரமாக அருள்வார். திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி வரம் பெறலாம். மாசி சங்கடஹர சதுர்த்தியான நாளை மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் பெண்கள் தாலி சரடினை மாற்றிக் கொண்டு விநாயகரை வழிபட்டால், இல்லற வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகி, தீர்க்க சுமங்கலியாக வாழ விநாயகர் அருள் செய்வார்.
மாசிக்கயிறு பாசி படியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.
விநாயகர் மிக எளிமையான தெய்வம் என்பதனால் அவரை உடலை வருத்தி, கடுமையான விரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சர்க்கரை, அவல் மட்டும் கூட படைத்து அருகம்புல் வைத்து வழிபட்டாலே மனம் குளிர்ந்து, நாம் வேண்டும் வரங்களை அளிக்கக் கூடியவர் விநாயகப் பெருமான்.






