திருச்சி மேற்கை கைப்பற்றுமா த.வெ.க?

திருச்சி மேற்கு தொகுதியில் தவெகவிற்கு அதிக ஆதரவு உள்ளது.
திருச்சி மேற்கை கைப்பற்றுமா த.வெ.க?
Published on

தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த தேர்தலைகளைவிட இத்தேர்தல் பெரும் ஆர்வத்தை மக்களிடையே உண்டாக்கியுள்ளது.

காரணம் இத்தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெகவும் களம் காண்கிறது. திமுகவிற்கு தான்தான் போட்டி எனவும் கூறிவருகிறார். இதனால் இத்தேர்லில் அவரின் கட்சி எத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறும், எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மேற்கு தொகுதி பகுதி மக்களிடையே கேட்கப்பட்ட கருத்துகளில் அங்கு தவெகவிற்கு அதிக ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com