

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலையில் ரூ.10 உயர்த்தப்பட்டு, அந்த தொகை MRP விலையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால் அந்த ரூ.10-ஐ திரும்ப பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனுக்காக என்று கூறப்படுகிறது. ஆனால் களத்தில், MRP-க்கு மேல் கூடுதலாக ரூ.10, ரூ.20, ரூ.40 வரை வசூலிக்கப்படுவதாக குடிமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
இந்த கூடுதல் வசூலை தடுக்கவே MRP-யில் ரூ.10 சேர்க்கப்பட்டதாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ள நிலையில், காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், கடைகள் அடைக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விலை நிர்ணயம் குடிமக்களுக்கு நியாயமானதா? இல்லையா? என்பது குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை குறித்து மாலைமலர் சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், VOX POP-ல் டாஸ்மாக் மதுபாட்டில் விலை நிர்ணயம் சரியே என்று 14 சதவீதம் பேரும், தவறு என்று 86 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
யூடியூப்- சரி என்று 71 சதவீதம் பேரும் தவறு என்று 26 சதவீதம் பேரும், கருத்து இல்லை என்று 3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம்- சரி என்று 77 சதவீதம் பேரும், தவறு என்று 16 சதவீதம் பேரும் கருத்தில்லை என்று 7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர்- சரி என்று 100 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
VOX POP வீடியோ இதோ..